ஒரு மனிதன் இன்னொரு மனுஷனைப் பார்த்து எதுக்கு எல்லாம் பொறாமை படுவாங்க.. பெயர், புகழ், பணம், மதிப்பு, மரியாதை இது எல்லாத்தையும் பார்த்து பொறாமை படுவாங்க. ஆனா, இது அனைத்தையும் விட முக்கியமான விஷயம்.. தூக்கம். மனிதன் தனது கவலைகள் அனைத்தையும் மறக்கும் சில மணி நேரம் தான் தூக்கம்.
சிலர் படுத்தவுடன் உறங்கும் வரம் வாங்கி வந்தவர்களாக இருப்பார்கள். இவர்களை பார்த்து பொறாமை படுவோர் எண்ணிக்கை கொஞ்சம் நஞ்சம் இல்லை.
ஒரு நாள் இரவு, நமக்கு தூக்கம் வரவில்லை ஆனால் நம் பக்கத்தில் படுத்திருக்கும் நபர் கொராட்டை விட்டு துக்கினால் எப்படி இருக்கும். அப்போது நமக்கு வரும் கோபத்திற்கும், எரிச்சலுக்கும் அளவே இருக்காது.

இப்படிபட்ட, தூக்கத்தைப் பற்றிய அதிர்ச்சியான தகவல் இது.
தினசரி 6 – 8 மணி நேரங்கள் வரை தூங்குபவர்களை ஒப்பிடும் போது, நாளொன்றுக்கு 8 மணி நேரங்களுக்கு மேல் தூங்குபவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருவருக்கு தினசரி 6 முதல் 8 மணிநேரம் தூக்கம் போதுமானது என்று பல ஆண்டுகளாக நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் சிலர நீண்ட மதிய நேர தூக்க பழக்கத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு சிலர் வார இறுதி நாட்களில் சோர்வின் காரணமாக நீண்ட நேரம் தூங்கும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர்.
தினசரி 6 – 8 மணி நேரங்கள் வரை தூங்குபவர்களை ஒப்பிடும் போது, நாளொன்றுக்கு 8 மணி நேரங்களுக்கு மேல் தூங்குபவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சில ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

சீனாவின் ஹுவாஜோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் சியோமின் ஜாங்கின் ஆய்வில், பங்கேற்பாளர்களின் தூக்க முறைக்கும், பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் இரவு தவிர நீண்ட நேரம் தூங்கினாலும் கூட நல்ல நிம்மதியான உறக்கம் இல்லை என்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 82% அதிகம் என்பதும் தெரிய வந்தது. மதிய நேரங்களில் குறைந்தபட்சம் 90 நிமிடங்களுக்கு மேல் தூங்கும் வழக்க முடியவர்களுக்கு பக்கவாதம் ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது

ஏனெனில் தூக்கம் மற்றும் தூக்கத்தின் சரியான காலம் மற்றும் நல்ல நிம்மதியான தூக்கத்தின் தரத்தை பராமரிப்பது உள்ளிட்டவை பக்கவாதத்தை தடுப்பதற்கான பிற நடத்தைத் தலையீடுகளை பூர்த்தி செய்ய கூடும் என்றும், அதிகமான தூக்கத்தால் கொலஸ்ட்ரால் அளவு மற்றும் உடல் எடை இரண்டுமே கணிசமாக உயர வாய்ப்புள்ளது. இதுவே பக்கவாதத்துக்கு காரணமாக அமைகிறது என்றும் சியோமின் ஜாங் குறிப்பிட்டிருக்கிறார்.
