• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிரஞ்சீவி படத்தின் ஐட்டம் பாடலுக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

சில படங்களின் பாடல் வரிகளுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்து வருகிறது. சமீபத்தில்கூட அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடிய ‘ஓ சொல்றியா மாமா’ என்கிற பாடல் வரிகள் ஆண்களை மிகவும் தரக்குறைவாக சித்தரிப்பதாக மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் அந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

இந்த நிலையில் தற்போது கொரட்டாலா சிவா டைரக்க்ஷனில் சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சார்யா படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான சானா கஷ்டம் என்கிற பாடலுக்கும் ஆர்எம்பி என்கிற டாக்டர்கள் சங்கத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


சிரஞ்சீவியும் ரெஜினாவும் ஆடிப்பாடுகின்ற இந்தப்பாடல் வரிகளில் இன்றைய இளைஞர்கள் பலரும் ஆர்எம்பி டாக்டர் ஆக விரும்புவதாகவும் காரணம் அவர்களுக்குத்தான் அழகு சிகிச்சை என்கிற பெயரில் சினிமா நடிகைகளின் உடலை தொட்டு மருத்துவம் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும் என்பது போலவும் அந்த பாடலில் தங்களை மோசமாக சித்தரித்து உள்ளதாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பாடல்வரிகளை மாற்றுவதுடன் பாடலை எழுதியதற்காக தங்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.