• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இப்படி செய்… அப்படி செய்’ என்று பாஜக சொல்லாது- அண்ணாமலை..!

ByA.Tamilselvan

Jul 16, 2022

அதிமுக விவகாரத்தில் இப்படி செய்; அப்படி செய்’ என்று பாஜக சொல்லாது என பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு.
காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பல்லவன் இல்லம் அருகில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அவர், “அனைத்து கட்சிகளும் காமராஜரை மறந்து விட்டன.கிண்டியில் உள்ள அவரின் நினைவிடம் சிதிலமடைந்து காணப்படுகிறது. அதை சீரமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.தற்போது உள்ள காங்கிரஸ், காமராஜரின் காங்கிரஸ் இல்லை. காமராஜரின் நேர்மையான ஆட்சியை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்பது பாஜகவின் ஆசை.ஆட்சி அதிகாரம் வந்ததும் திமுக அமைச்சர்களுக்கு அதிகார திமிர் வந்து விட்டது. அதற்கு எடுத்துக்காட்டு தான் அமைச்சர்கள் மக்களை அடிக்கும் சம்பவம்; அதிகார மமதையில் திமுக இருக்கிறது.
அதிமுக உட்கட்சி பிரச்சனையில், அக்கட்சியினரே தீர்வு காண வேண்டும். அக்கட்சியை வழி நடத்தும் பொறுப்பு, அதன் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு உள்ளது. பாஜக எந்த நேரத்திலும் அதிமுகவுக்குள் புகுந்து, ‘இப்படி செய்; அப்படி செய்’ என்று சொல்லாது” என்று தெரிவித்தார்.