• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது

ByA.Tamilselvan

Jul 26, 2022

தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் உட்பட அன்னியமரங்களை நடக்கூடாது என கோர்ட் உத்தரவு
தமிழ்நாடு வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிக்கையாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், வனங்களை காப்பது தொடர்பாக அறிக்கைகளை மட்டுமே தாக்கல் செய்யும் தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அன்னிய மரங்களை அகற்ற கொள்கை முடிவெடுத்துள்ள தமிழ்நாடு அரசு, யூக்கலிப்டஸ் மரங்களை ஏன் நடுகிறது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இனி தமிழ்நாட்டில் யூக்கலிப்டஸ் மரங்களை அரசு நடக்கூடாது என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.