விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கடற்கரை ராஜ் அவர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பிரச்சாரத்தை வெம்பக்கோட்டை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான நல்லதம்பி மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

வெம்பக்கோட்டை ஒன்றியம் அன்ன பூர்ணியாபுரம், செவல்பட்டி, அலமேலு மங்கைபுரம், துலுக்கன்குறிச்சி குகன் பாறை, சிப்பி பாறை, உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சந்திப்புகளின் போது, தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது.
மேலும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து கடற்கரைராஜ் அவர்களை வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டனர். பிரச்சாரத்தில் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், திமுக நிர்வாகிகள் உற்சாகத்துடன் வாக்கு சேகரிப்பை தொடர்ந்து வருகின்றனர்.



