மதுரையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடைபெற இருந்த திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம், 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 23ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் நாளை உண்ணாவிரதம் நடக்க உள்ள நிலையில் மதுரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழங்காநத்தம் ரவுண்டானா அருகே நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டம் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.