மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில், ப்யூசன் மைக்ரோ பைனான்ஸ் வங்கி கிளை சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த கொதிப்பு பரிசோதனை, மகப்பேறு மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. ப்யூசன் மண்டல மேலாளர் சதீஷ்குமார், ஐ சி ஐ சி ஐ வங்கி வாடிப்பட்டி கிளை மேலாளர் வசந்தி துவக்கி வைத்தனர். பெரியகுளம் அரசு மருத்துவமனை நுரையீரல் சிறப்பு மருத்துவர் பிரேம்குமார், மகப்பேறு மருத்துவர் சங்கீதா ,குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் உத்திராசெல்வி, மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். மருந்தாளுநர் மணிகண்டன் மற்றும் செவிலியர்கள் அலுவலர்கள், ப்யூஷன் வங்கி பார்த்திபன் முனியப்பன் சுரேஷ் ஆனந்த் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். இதில் வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.