• Fri. Apr 19th, 2024

திமுகவின் ஆட்டம் விரைவில் முடிய உள்ளது! கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

ByA.Tamilselvan

Sep 19, 2022

திமுகவின் ஆட்டம் விரைவில் முடிய உள்ளது என ராஜபாளையம் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் வக்கீல் துரைமுருகேசன் தலைமை வகித்தார். தெற்கு நகர செயலாளா் பரமசிவம், மாவட்ட கழக துணை செயலாளர் அழகுராணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைசெயலாளர்கள் வனராஜா, செல்வராஜா, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் எனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் கூட்டணி கட்சி மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த சமுதாயமும் என்னை புறக்கணிக்காமல் வாக்களித்தார்கள். 3,500 வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பறிபோனது. 10 ஆண்டுகளாக ராஜேந்திரபாலாஜியை அமைச்சராக பார்த்த மக்கள், ஒரு மாற்றம் வேண்டும் என எண்ணிவிட்டார்கள்.


கருணாநிதியால் அதிமுகவை அழிக்க முடியாத நிலையில் அவருக்கு பின்னர் வந்த ஸ்டாலினால் எப்படி அதிமுகவை அழிக்க முடியும். என்னை விரட்டி விரட்டி பிடித்தனர். என்னை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். நான் பயப்பட்டு அதிமுகவை விட்டு வெளியேறவில்லை. கலைஞர் ஆட்சியில் எட்டு மணி நேரம் மின்தடை என்றால் தற்போது ஸ்டாலின் ஆட்சியில் 10 மணி நேரம் மின்தடை. இதுதான் இருவரின் ஆட்சிக்கு உள்ள வித்தியாசம். மின் கட்டணம் உயர்ந்ததால் அதை ஈடு செய்வதற்கு அடிக்கடி மின்தடை ஏற்படுத்துகின்றனர் விவசாயி வயிற்றில் அடிக்கின்ற ஆட்சி திமுக ஆட்சி.
டாஸ்மாக் கடையில் கவர்மெண்ட் சரக்கு கரூர் சரக்கு என இரண்டு கிடைக்கிறது. தற்போது கட்டிங் அடித்தால் போதை ஏறுவதில்லை. தொழிலாளர்கள் வாங்கிய ஊதியம் அனைத்தையும் டாஸ்மாக்கில் தொலைகின்றனர். அண்ணா திமுக ஆட்சியில் அரிசி பருப்பு டாஸ்மாக் என அனைத்து பொருட்களும் ஒரிஜினலாக இருக்கும். திமுக விரைவில் வீட்டுக்கு சென்று விடும் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து வைத்து விடுவார்கள் என நினைக்கிறேன்.


ஸ்டாலின் நாள் ஒன்றுக்கு ஐந்து புகைப்பட ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். விளம்பரத்தால் உயர்ந்த வாழ்க்கை நிரந்தரமாகாது. உழைக்க வேண்டும், பொதுமக்களின் சிரமம் குறித்து முதல்வருக்கு கவலை இல்லை. கடந்த ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கு டப்பா தான் கழண்டது. திமுகவுக்கு டாப்பே கழண்டு விடும். திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்ந்து சட்டமன்ற தேர்தலும் வரலாம். எது நடந்தாலும் உங்கள் உழைப்பை மதிக்க கூடிய நபர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்..ராஜவர்மன், தலைமை கழக பேச்சாளர்கள் தெய்வேந்திரன், ஜீவாகணேசன்,சங்கை எம்.கணபதி, ராஜபாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், சேத்தூர் நகரக் கழகச் செயலாளர் பொன்ராஜ்பாண்டியன், ராஜபாளையம் நகர கழக செயலாளர் பரமசிவம், வக்கீல் துரை முருகேசன், விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கே.கே.பாண்டியன் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் முத்துபாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் மாரீஸ்குமார், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜ.ஓ காலனி மாரிமுத்து, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் சேதுராமன், விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன், சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் வெங்கடேஷ், கருப்பசாமி, வத்ராப் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சுப்புராஜ், சேதுவர்மன், செட்டியார்பட்டி பேரூர் கழக செயலாளர் அங்குதுரைபாண்டியன், சுந்தரபாண்டியம் பேரூர் கழக செயலாளர் மாரிமுத்து, கொடிக்குளம் பேரூர் கழக செயலாளர் சங்கரமூர்த்தி, வத்திராயிருப்பு பேரூர் கழக செயலாளர் வைகுண்டமூர்த்தி, வ.புதுப்பட்டி பேரூர் கழக செயலாளர் ஜெயகிரி, சேத்தூர் பேரூராட்சி, எஸ்.கொடிக்குளம் பேருராட்சி, வத்திராயிருப்பு பேரூராட்சி, சுந்தரபாண்டியன் பேரூராட்சி, செட்டியார்பட்டி பேரூராட்சி, வ.புதுப்பட்டி பேரூராட்சி, மம்சாபுரம் நிர்வாகிகள் மம்சாபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜேஷ்குமார், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராமராஜ்பாண்டியன், எதிர்க்கோட்டை ஆர்.ஆர்.மணிகண்டன், சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி.சங்கர், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கழக ஒன்றிய கழக நகர கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட அம்மா பேரைவ துணைத்தலைவர் திருப்பதி நன்றி கூறினார் கூட்ட ஏற்பாடுகளை ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *