திமுகவின் குடும்ப வாரிசுகளை கழக உறுப்பினராக்கும், இல்லந்தோறும்
திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை. பல்வேறு அரசியல் கட்சிகளில் தொன்று தொட்டு ஒரு வழக்கம் இயல்பாகவே தொடரும். தந்தை வழியில் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் வழி, வழியாக ஒரே கட்சியில் பயணிப்பது. கால ஓட்டத்தில் தேசிய கட்சியை சேர்ந்த இளைஞர்கள் மாநில கட்சியில் ஆர்வம் காட்டுவது என்ற நிலை தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள மாற்றம்.
திமுகவின் இளைஞர் அணி கட்சிக்குள் ஒரு திட்டத்தை செயல்படுத்த முயன்று களத்தில் இறங்கியுள்ளது.
திமுகவே சேர்ந்த இளம் பெண்கள்,இளைஞர்களை(வயது_18)யை எட்டியவர்களை. திமுகவின் குடும்பத்தை சேர்ந்தவர்களை. திமுகவின் உட் பிரிவான திமுக இளைஞர் அணியில் உறுப்பினர்களாக சேற்பதின் மூலம் ஒவ்வொரு ஊர் கட்சியின் கிளைகளை வலுப்படுத்துவது என்பதுடன். இன்றைக்கு தமிழகத்தில் பொதுவான கருத்து. இளைஞர்களை அதிகமாக ஈர்க்கும் கட்சி நாம் தமிழர் என்ற ஒரு கருத்து பரபி வரும் நிலையில், தமிழகத்தின் உச்ச நட்சத்திரமான விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம்,2026_சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டி இட இருக்கும் நிலையில். தமிழகத்தில் ஏற்கனவே கோலோச்சி வரும் கட்சிகள் அவர்களது கட்சியில் உள்ள இளைஞர்கள் விலகி செல்லாது தடுத்தாட வேண்டிய கட்டயா சூழல் ஏற்பட்டுள்ளதை திமுகவின் தலைமை உணர்ந்து செயல்படுகிறது.

திமுகவின் வாரிசு அரசியலில் நாளைய திமுகவின் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்னும் அதிகமாக வலுப்படுத்தும் திமுகவின் காய் நகர்த்தலே. திமுகவை சேர்ந்தவர்களின் குடும்பத்தின் பதின் வயதினரை தி மு க வில் உறுப்பினாராக்கும் திட்டமே “இல்லந்தோறும் தி மு க இளைஞர் அணி”
குமரி மாவட்டத்தில் அதன் முதல் பணியை தமிழகத்தின் தென் கோடி பகுதியான கன்னியாகுமரியில், திமுகவின் புதிய திட்டம் புதுக்கிரமத்தில். நாகர்கோவிலில் மாநகராட்சி மேயரும்,குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷ் தி மு க கட்சியினை சேர்ந்த குடும்பங்களின் வீடுகளுக்கு சென்று. வீட்டினர் நலம் விசாரிப்போடு, கட்சியின் புதிய திட்டத்தை செயல் படுத்த தொடங்கியுள்ளார். வீட்டினரும் அவர்கள் வீட்டில் உள்ள பதின் வயதினரிடம் மகேஷ் மாமா வந்துள்ளார். உன் ஆதார் அட்டையை எடுத்துவா என உரிமையோடு அழைத்ததை காண முடிந்தது. ஒவ்வொரு நகர பகுதியில் நாள் ஒன்றுக்கு 50_குடும்பங்களை சந்திப்பதை இலக்காக வைத்துள்ளதாக.”அரசியல் டுடே” விடம் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் முதல் நாள் தொடங்கிய நிகழ்வில் வடக்கு ஒன்றிய செயலாளர் பாபு, கன்னியாகுமரி பேரூர் செயலாளர் குமரி ஸ்டீபன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர்கள் பொன்.ஜாண்சன், மதியழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
