• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி 19வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி!..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் 19வது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெயா செல்லத்துரை 476 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் .

கடந்த 9ஆம் தேதி ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் 19வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கும், கதிர் நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ராஜதானி பஞ்சாயத்துக்குட்பட்ட வீரசின்னம்மாள் புரம் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதனையடுத்து நேற்று ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது .

இதில் 19 வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெயா செல்லத்துரை ,தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தீபா பாக்கியராஜைவிட 476 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றார்.

அதேபோல் கதிர் நரசிங்க புரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட முருக லட்சுமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கந்த வேலை காட்டிலும் 317 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

ராஜதானி ஊராட்சி 3வது வார்டுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாப்பா என்பவர் 163 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் .வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றிதழ்களை வழங்கினார்.வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர் செல்லத்துரையின் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினரருக்கு மாலை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

படவிளக்கம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் 19வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஜெயா செல்லத்துரைக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றிதழ் வழங்கியபோது எடுத்த படம் ‘அருகில் சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மாவட்ட கவுன்சிலர்கள் ஜி.கே. பாண்டியன், மகாராஜன், ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம் உள்பட கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.