திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள குளங்களில் உபரி நீரை கொண்டு வந்து நிரப்புவது சம்பந்தமாக சிலர் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி, முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில்பாலாஜி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் ஆகியோரின் முயற்சியின் பேரில் 29.3.2023 அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டம் மானிய கோரிக்கையின் போது நீர்வளத்துறை அமைச்சரால் ரூ 12 கோடியே 75 லட்சம் 35 ஆயிரம் மதிப்பீட்டில் 9 புதிய நீர்ப்பாசன திட்டங்களுக்கான ஆய்வுப் பணி மேற்கொள்வதற்காக 27.6.2023 அன்று வெளியிடப்பட்ட அரசு ஆணைப்படி முதல் திட்டமாக காவிரி –
அமராவதி ஆறுகள் சங்கமிக்கும் திருமுக்கூடனூரில் இருந்து வெள்ளக்கால உபரி நீரை நீரேற்று முறையில் சேமித்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 102 நீர்வளத்துறைக் குளங்களும் 1013 ஊராட்சி ஒன்றிய குளங்களும் நிரம்பும் வகையில் ரூ 5,555 கோடி மதிப்பிலான திட்டம் உருவாக்கப்பட்டு 20.8.2025 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்படி
1161 கிலோமீட்டர் தூரத்திற்கு 7 நீரேற்று நிலையங்கள் உருவாக்கப்பட்டு 24 சக்தி வாய்ந்த மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வேடசந்தூர் ஒன்றியத்தில் 107 குளங்களுக்கும் வடமதுரை ஒன்றியத்தில் 103 குளங்களுக்கும் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 117 குளங்களுக்கும் மொத்தம் 327 குளங்களுக்கு நீரை நிரப்பும் பச்சத்தில் 1981 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு நேரடியாகவும் மற்றும் 35 ஆயிரம் விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் நிலத்தில் நீர்மட்டம் உயர்வதற்கும் இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் வளமான பகுதியாக மாறி தண்ணீர் பஞ்சமே இல்லாத நிலையில் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உண்மை இப்படி இருக்க கடந்த 2016 முதல் 2021 வரை அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்
கடைசி மூன்று மாதத்தில் ரூ 20 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கையை தயார் செய்யப்பட்டு முழுமையாக ஆய்வு நடத்தப்படாத நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து வேடசந்தூர் தொகுதியில் உள்ள குளங்களுக்கு நிரப்புவோம் என்று உண்மைக்கு புறம்பான தகவல்களை பொதுமக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்பது உறுதி. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற உடன் வேடசந்தூர் தொகுதி முழுவதும் காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு குளங்களை நிரப்பும் திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.




