மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளாக ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட திமுக சார்பில் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி ஆ. சின்னசாமி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கர் கலந்து கொண்டு, மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் ஆ. சின்னசாமி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட திமுக துணை செயலாளர்கள் அருங்கால் சந்திரசேகரன், லதா பாலு, கணேசன், மாவட்ட பொருளாளர் கு. ராஜேந்திரன், மொழிப்போர் தியாகி ஆ.சின்னசாமியின் புதல்வி திராவிடச் செல்வி,ஒன்றிய திமுக செயலாளர்கள் தனசேகர், இரா. கென்னடி, பூ. செல்வராஜ், அறிவழகன், அன்பழகன், தெய்வ இளையராஜன், அசோக சக்கரவர்த்தி, கேஜிஎஸ் முருகன், கணேசன், ஆர். கலியபெருமாள், அண்ணாதுரை, பொன் செல்வம், தனவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் இரா. பாலு, சுமதி கருணாநிதி, நகர செயலாளர்கள் வெ.கொ. கருணாநிதி, இரா. முருகேசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் லூயி. கதிரவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர். இராமராஜன், மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் இரா. இரமேஷ், செல்வ பிரபாகரன், சு. சுரேஷ், ரெ. வெங்கட்ராமன், தமிழ்அழகி, கீழப்பழுவூர் நகர செயலாளர் இரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.







