பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை ஒட்டி மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு உள்ள பேரறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

முன்னதாக வாடிப்பட்டி பழைய நீதிமன்றம் முன்பு மௌன ஊர்வலம் நடைபெற்றது இதில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் பொருளாளர் சோமசுந்தரம் மாவட்ட துணைச் செயலாளர் புதூர் சேகர் ஒன்றிய செயலாளர்கள் பால ராஜேந்திரன் பசும்பொன்மாறன் பேரூர் செயலாளர்கள் மு பால்பாண்டியன் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பேரூராட்சித் தலைவர்கள் எஸ் எஸ் கே ஜெயராமன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி பால்பாண்டியன் ஸ்ரீதர் பேரூராட்சி துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் கார்த்திக் லதா கண்ணன் நிர்வாகிகள் வாடிப்பட்டி முன்னாள் பேரூர் செயலாளர் மு பா பிரகாஷ் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.










