• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

திமுக கவுன்சிலர் கேள்விக்கு பதில் அளிக்காமல் எழுந்து சென்ற திமுக நகர் மன்ற தலைவி..,

ByRadhakrishnan Thangaraj

Mar 10, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்மன்ற அவசரக் கூட்டம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷாயம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு இராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார் .

கூட்டம் துவங்கியவுடன் 17 வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெகதீஸ்வரி நான் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என கூறினார் .அதற்கு நகர மன்ற தலைவி கூட்டம் ஆரம்பிக்கட்டும் அதன் பின் உங்களுடைய கேள்வி கேளுங்கள் என கூறினார் கூட்டம் ஆரம்பித்த உடனே ஒன்று முதல் 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என கூறி கூட்டம் முடிந்தது என நகர மன்ற தலைவி எழுந்து சென்றார் .

இதனால் 17வது வார்டு கவுன்சிலர் ஜெகதீஸ்வரி நான் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகவே எனக்கு பல தொலைபேசி வந்தது தற்போது என் கேள்விக்கு பதில் அளிக்காமல் செல்கின்றார்கள் ஆளுங்கட்சி கவுன்சிலர் ஆன எனக்கு கேள்வி கேட்க கூட உரிமை இல்லையா திமுக கவுன்சிலருக்கே இந்த அவல் நிலை .
திமுகவை சேர்ந்த சேர்மனாக இருக்கக்கூடிய நகர்மன்ற தலைவி நகரத்தின் மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் கேள்வி கேட்க உரிமையில்லை என்பது போல் அவருடைய செயல் உள்ளது.

எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளிக்காமல் செல்கின்றார் நான் கேள்வியை யாரிடம் கேட்பது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.