• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

திமுக நகர் மன்ற தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு..,

BySubeshchandrabose

Feb 25, 2026

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 26 வது வார்டில் திமுகவைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர் நகர்மன்ற போட்டியிட்டு வெற்றி பெற்று திமுக நகர்மன்ற உறுப்பினராக உள்ளார் இவர் நகர்மன்ற துணைத் தலைவராகவும் பதவி யோசித்து வருகிறார்.

இந்நிலையில் நான்காண்டுகளாக 26 வது வார்டில் அடிப்படை வசதியான பாதாள சாக்கடை வசதி கழிவுநீர் வாய்க்கால் வசதி சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருமாறு நான்கு ஆண்டுகளாக நகர் மற்றும் கூட்டத்தின் போது தொடர்ந்து நகர்மன்ற தலைவர் திமுக சேர்ந்த சுமிதா சிவகுமார் இடம் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார்.

ஆனால் நகராட்சி நிர்வாகம் 26 வது வார்டில் நான்கு ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யாமல் அந்த வாடை புறக்கணித்து வந்துள்ளனர் இந்நிலையில் தற்போது கழிவுநீர் வாய்க்கால் பாதாள சாக்கடை அடைப்பு உள்ளிட்டவைகளை சரி செய்யாமல் சாலையில் பார்வர்ட் பிளாக் கல் பதிக்கும் பணியை இன்று தொடங்கியுள்ளனர்.

இதற்கு திமுக நகர்மன்ற துணைத் தலைவர் ராஜா முஹம்மது எதிர்ப்பு தெரிவித்து முறையாக அடிப்படை வசதிகள் செய்துவிட்டு புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என சாலை அமைக்கும் பணியை இன்று தடுத்து நிப்பாட்டினார்.

இது தொடர்பாக அங்கு வந்த நகராட்சி அலுவலரிடம் நகர்மன்ற துணைத் தலைவர் சாலை அமைப்பதற்காக எந்த ஒரு தகவலும் இதுவரை என்னிடம் கூறவில்லை எந்த ஒரு அறிவிப்பும் இன்றி அவசர அவசரமாக எதற்கு சாலை அமைத்து அரசு பணத்தை வீணாக்குகிறது என சரமாரியாக கேள்வி கேட்டபோது அதற்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து அதிகாரி அங்கிருந்து அவசர அவசரமாக சென்றுள்ளார்.

இதனால் நகர் மன்ற துணைத் தலைவர் ராஜா முகமது தனது வார்டு பகுதியில் சாக்கடை வசதி கழிவுநீர் பாதாள சாக்கடை அடைப்பு உள்ளிட்டவைகளை சரி செய்துவிட்டு முறையாக சாலை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதுவரை சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சொந்த கட்சி உறுப்பினராக உள்ள வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்வதில் திமுக நகர மன்ற தலைவர் பாரபட்சம் செய்வதாகவும் தொடர்ந்து பெரிய குளம் நகராட்சி பகுதிகளில் பல்வேறு முறைகேடுகளில் நகர்மன்ற தலைவர் செய்து வருவதாகவும் திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற துணைத் தலைவரை குற்றம் சாட்டி உள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பான ஏற்படுத்தியுள்ளது.