புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் பழமை வாய்ந்த சுப்பராமய்யர் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்ப்படுத்தி தர வேண்டும் என்று அப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் திரு.ரவி பல்லவராயர் அவர்கள் கேட்டுக்கொண்டதன்படி , புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர்.மு.க.முத்துக்கருப்பன் அவர்கள் தனது சொந்த நிதியின் மூலம் அப்பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் வர்ணம் பூசுதல் , சுவர் எழுப்புதல் என பழமை மாறாமல் புதுப்பித்து கொடுத்தார்.

இந்த மக்கள் பணியை பாராட்டு விதமாக அப்பள்ளியில் புதுக்கோட்டை இளைய மன்னர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் தொண்டைமான் அவர்களின் முன்னிலையில் பாராட்டு விழா நடத்தி டாக்டர்.மு.க.முத்துக்கருப்பன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.




