• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொங்கல் சிறப்பு பரிசு வழங்கியதில் திமுக 400 கோடி ஊழல்

பொங்கல் சிறப்பு பரிசு பொது மக்களுக்கு வழங்கியதில் திமுக 400 கோடி ஊழல் என பா.ஜ.க. மாநில விவசாய அணி தலைவர் பேட்டி.

பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரதப் பிரதமர் மோடி பஞ்சாப் செல்லும்பொழுது பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் அரசு உரிய பாதுகாப்பு எடுக்காமல் அலட்சியம் செய்து அடுத்து காங்கிரஸ் கட்சியை கண்டிக்கும் விதமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பின் விவசாயிகளின் வாழ்வாதாரமான கோதவாடி குளம் பகுதியில் தமிழ்நாடு விவசாய அணி மாநில தலைவர் ஜிகே நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது பொள்ளாச்சி மாவட்டத்தில் தேங்காய் தொட்டி ரூ27,000விற்று வந்தது தற்போது திமுக பொறுப்பேற்று ரூபாய் 10,000 விற்கப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் விவசாயிகள் குறி வைத்து மிரட்டி திமுக கட்சியில் ஆட்களை சேர்க்கின்றனர். அ.தி.மு.க.ஆட்சி காலத்தில்முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கலுக்கு பொருட்கள் கொடுத்து பணம் தந்து தை திருநாளை கொண்டாட வைத்தார். திமுக முதல்வர் ஸ்டாலின்பொதுமக்களுக்குபொங்கலுக்கு கரும்பு,வெல்லம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கு ரூ 1297கோடி ஒதுக்கி அதில் பொருட்கள் விலை ரூபாய் 600 ஆகும்இதில் ரூபாய் 400 கோடி திமுக ஊழல் செய்துள்ளத. தமிழகத்தில் உள்ள விவசாயிகள் வெல்லம் கோதுமை ரவை பொருட்கள் தயாராக உள்ள நிலையில்,ஆளுங்கட்சியினர் மகாராஷ்டிரா ஆந்திரா போன்ற பகுதிகளில் கொள்முதல் செய்து விவசாயிகளை புறக்கணிக்கவும் செயல்களில் திமுக ஈடுபடுகின்றது எனவும் தமிழகத்தில் விடியல் ஆட்சி இல்லை விடியாத ஆட்சி என தெரிவித்தார். இதில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தராஜன்,மருதாசலம்,செந்தில், பாபா ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.