விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பாலத்துக்கு தியாகி சங்கரலிங்கனார் பெயர் சூட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. மாந கர செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரெயில்வே மேம்பாலம்

இதுகுறித்து சிவகாசி மாநகர தி.மு.க. செயலாளர் உதயசூரியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகாசி சட்டமன்ற தொகுதி மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையான சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பாலத்தை குறு கிய காலத்தில் பிரமாண்டமாக அமைத்து கொடுத்து அதற்கு தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம் என பெயர் சூட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிவகாசி தொகுதி மக் கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் நம் மாநிலத்திற்கு மத ராஸ் மாகாணம் என்ற பெயர் ஏற்புடையது அல்ல என்றும், தமிழ் நாடு என்ன சூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்த தியாகி பெயர் சூட்டியதற்கு சிவகாசி நகர மக்கள் சார்பில் வரவேற்கிறோம் எனக் கூறியுள்ளார்






; ?>)
; ?>)
; ?>)
