நிலக்கோட்டை (தனி) திமுக வேட்பாளர் எஸ். நாகஜோதி, ஊர்வலமாக சென்று, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பாக ச.நாகஜோதி போட்டியிடுகிறார். அவர் இன்று நிலக்கோட்டை மதுரை சாலையில் உள்ள, திமுக கூட்டணி கட்சி அலுவலகத்தில் இருந்து, திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தபடி ஊர்வலமாக சென்று, வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமாரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, திமுக ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



