திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் பிரசன்னா காலனி வல்லானந்தபுரம் பகுதிகளில் திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் . நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுப்பெறும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர பரப்பரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்க பாண்டியன் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது அருகில் இருந்த வடை கடையில் வாக்குகள் சேகரித்தார். பின்னர் கடைக்காரரின் அனுமதியுடன் உளுந்த வடை சுட்டு திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கிருத்திகா தங்கபாண்டியன் கேட்டுக்கொண்டார் .

பொறியியல் பட்டாதரியான கிருத்திகா தங்கபாண்டியன் வடை சுட்டு வாக்காளர்களிடம் வாக்குகள் கேட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் .



