புதுக்கோட்டை திமுக வேட்பாளர் டாக்டர் வை முத்துராஜாவுக்கு தொண்டர்கள் வரவேற்பு. சென்னையிலிருந்து வந்த அவரை புதுக்கோட்டை மாநகர எல்லையில் வைத்து வரவேற்று அழைத்து வந்தனர்.

சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் டாக்டர் வை. முத்துராஜா. புதுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கட்சியின் தலைமை மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது. இதற்கான அறிவிப்பை நேற்று கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று காலை சென்னையிலிருந்து அவர் புதுக்கோட்டைக்கு வருகை தந்தார். அவர் வருவதை முன்கூட்டியே அறிந்திருந்த திமுக தொண்டர்கள் மற்றும் புதுக்கோட்டைப் பொறுப்பாளர்கள் திரளாக புதுக்கோட்டையின் நகர எல்லையான அருங்காட்சியகம் அருகே திரண்டு நின்று மேளதாளத்துடன் பட்டாசு வெடிகள் கொளுத்தி வரவேற்றனர்.

அவருக்கு ரோஜா பூ மாலை மற்றும் சால்வைகள் அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர். அங்கிருந்து ஊர்வலமாக பிரகதாம்பாள் கோவில், திலகர் திடல் வழியாக வடக்கு ராஜ வீதியில் இருக்கும் மாவட்ட திராவிடர் கழக அலுவலகத்திற்கு வந்து மரியாதை நிமித்தமாக அங்கும் தொண்டர்களை சந்தித்து விட்டு அதே வளாகத்தில் இருக்கும் கலைஞர் கருணாநிதி முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து தனது நன்றியை தெரிவித்தார். மேலும் அங்கிருந்து வடக்கு ராஜீவியை கீழ ராஜுவை வழியாக தெற்கு ராஜ வீதி வந்து அங்கு இருக்கும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்நிகழ்வில் திமுக மாநகரச் செயலாளர்கள் ராஜேஷ், லியாகத்தலி, உள்ளிட்ட திமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களும் மாநகர் மன்ற திமுக உறுப்பினர்களும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலத்தில் அருங்காட்சியகம் தொடங்கி அண்ணா சிலை வரை பல இடங்களிலும் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. கார்களும் மோட்டார் சைக்கிள்களும் அணிவகுத்து வந்ததால் தேர்தல் பார்வையாளர்கள் என்று சொல்லப்படும் அதிகாரிகளும் இந்த ஊர்வலத்தை கண்காணித்தவாறு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




