கன்னியகுமரியை நகராட்சியாக உயர்த்த ஆணையிட்ட முதல்வருக்கு நேரில் சென்று கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரி கடலில் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின் 25_வது ஆண்டு வெள்ளிவிழா, கடலில் அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் பாறைகளுக்கு இடைப்பட்ட கடல் பரப்பில். ரூ.38-கோடி செலவில் கட்டப்பட்ட கண்ணாடிப் பாலத்தை திறந்து வைத்து ஆற்றிய விழா உரையில் நான்கு முக்கியமான அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்,இப்படித் தொடங்கினார். கன்னியாகுமரி அய்யன் சிலை திறப்பு விழாவிற்கு மட்டுமே வந்துவிட்டு திரிம்பிப் போய்விடுவோனா.?


கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி இன்று முதல் நகராட்சியாக தரம் உயர்த்தப் படுகிறது.
இரண்டு நினைவு சின்னங்களுக்கு கடலில் படகு பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மூன்று புதிய படகுகள் விடப்படும். காமராஜ் மார்சல் நேசமணி
ஜி.யூ.போப் ஆகியோர் பெயர்களில் அந்த படகுகள் இயக்கப்படும் என முதல்வர் சொல்லி முடித்ததும் அரங்கம் முழுவதும் எதிரொலித்த “கை” தட்டல் நீண்ட நேரம் ஒலித்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பிற்கு நேரில் நன்றி தெரிவிக்க, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் 15 பேர், காங்கிரஸ் கவுன்சிலர்1_என மொத்தம் 16- பேர் சென்னை சென்றனர். இவர்கள் சென்னை சென்ற தினத்தில் சட்டமன்ற கூட்டம் நடக்கும் நேரம் என்ற நிலையில். குமரி கவுன்சிலர்களை எல்லாம் சென்னைக்கு அழைத்து சென்ற, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் ஆன மகேஷ்யும், அமைச்சர் நேருவை சந்தித்து முதல்வர் சந்திப்பிற்கு ஏற்பாடுகள் செய்யக் கேட்டதும். அமைச்சர் சொன்ன பதில் ஐயோ இப்போதைய சூழலில் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொல்வது கடினம். நான் முதல்வரிடம் நீங்கள் எல்லாம் வந்து நன்றி தெரிவித்ததை சொல்லி விடுகிறேன் என சொல்ல, பெண் கவுன்சிலர்கள் எல்லாம். தலைவரை கடந்த வாரம் கன்னியாகுமரியிலே பார்த்தோமே. எங்கள் நன்றியை நேரில் சொல்ல பிள்ளைகள்,குடும்பத்தை எல்லாம் விட்டு,விட்டு இரவெல்லாம் 800_கிலோ மீட்டர் பயணம் செய்து வந்துள்ளோம் என அமைச்சர் நேருவிடம் சொல்ல, மேயர் மகேஷ் அமைச்சரை பார்க்க, அமைச்சர் நேரு மகேஷ் முகத்தை பார்க்க ஒரு துல்லியமான அமைதி அங்கு நிலவ. அந்த நேரம் பார்த்து. நடிகர் எஸ்.வி.சேகர் அமைச்சரை பார்க்க வர, மேயர் மகேஷ், குமரி ஸ்டீபன், கவுன்சிலர்கள் எல்லாம் அமைச்சரின் அறையை விட்டு வெளியே வந்து காத்திருந்துள்ளனர்.


மேயர் மகேஷ் மட்டுமே தனியாக சென்று அமைச்சரை பார்த்தபின். வேஸ்ட் டியின் ஒரு பக்க தும்பை பிடித்துக்கொண்டு, முகத்தில் புன்னகை பூக்க ஓட்டமும், நடையுமாக வெளியே வந்தவர் அண்ணன் முதல்வர் நம் சந்திப்பிற்கு அனுமதி தந்து விட்டார். நாளை காலை (ஐனவரி8)ம் தேதி காலை 11மணிக்கு சட்டமன்ற பகுதியில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் முதல்வரை சந்திப்போம் என தெரிவித்ததும், கன்னியாகுமரி கவுன்சிலர்கள் எல்லாம் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரை சுற்றி நின்று ஓங்கிய குரலில் நன்றி,நன்றி, நன்றி என தெரிவித்த கூட்டம் அடுத்த நொடி கட்டவிழ்த்து விட்ட நெல்லிக்காய் மூட்டை போல் கலைந்து சென்னையை சுற்றி பார்க்க சென்று விட்டார்கள்.

சூரியன் உதிக்கும் குமரி முனையில் இருந்து வந்த சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள், இவர்களுடன் கை சின்னத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர் ஆனி தாமஸ்யும். முதல்வரை சந்திக்க, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்றத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் பாதுகாப்பு பரிசோதனைக்கு பின், முதல்வர் வருகைக்கு காத்திருந்தார்கள். இடைப்பட்ட நேரத்தில் அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டியில் சட்டமன்ற நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருந்த சூழலில். அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் பரபரப்படைந்ததில். அங்கிருந்தவர்கள் முதல்வர் வரப்போகிறார் என்பதை உணர்ந்தனர்.


முதல்வர் புன்னகை பூத்தப்படி,கூப்பிய கை களுடன் வர. மேயர் மகேஷ், முதல்வருக்கு. அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட உறுப்பினர்களை ஒவ்வொரு வராக அறிமுகம் செய்த வண்ணம் ஒவ்வொருவரும் அவர்கள் கொண்டு வந்த புத்தகத்தை கொடுத்து முதல்வருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வரிசையில் வந்த காங்கிரஸ் கவுன்சிலர் முதல்வரிடம். பழ. நெடுமாறன் எழுதிய “பெரும் தலைவரின் நிழலில்” என்ற புத்தகத்தை கொடுத்து வணங்கினார். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியை நகராட்சியாக அறிவித்ததற்கு நன்றி, மகிழ்ச்சி என அனைத்து கவுன்சிலர்களும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றார்கள்.

சென்னை பயணம் வெற்றி. சட்டமன்ற கூட்டம் நடந்துக் கொண்டு இருக்கும் போதே, சட்டசபையில் இருந்து முதல்வர் எழுந்து வந்து எங்களை எல்லாம் சந்தித்தது. நாங்கள் கொடுத்த புத்தகங்களை எல்லாம் புன்னகையோடு வாங்கி கொண்டதற்கு எல்லாம் உடன் இருந்து உதவிய அண்ணன் அமைச்சர் நேருவும், எங்கள் மாவட்ட பொருப்பு அமைச்சர் தங்கம் தென்னரசும் தான் காரணம் என அவரது மானசீகமாக நன்றியை நம்மிடம் பகிர்ந்தார்.
