மாநகராட்சி கூட்ட வளாகம் பகுதியில் தி.மு.க கூட்டணி மற்றும் அ.தி.மு.க கவுன்சிலர்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கே போலீசார் விரைந்து சென்றனர். அதன் பிறகு தி.மு.க கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் அங்கு இருந்து கூட்டத்திற்கு சென்று பங்கேற்றனர்.
பின்னர் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது அப்பொழுது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு புறக்கணித்ததை கண்டித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பேசியதால், அதற்கு அ.தி.மு.க வின் உறுப்பினர்கள் பொய் கூறி போலி வேஷம் போடாதீர்கள் என்றும், மெட்ரோ ரயில் வராததற்கு தி.மு.க தான் காரணம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து தி.மு.க உறுப்பினர்கள் நீங்கள் போலி வேஷம் போடாதீர்கள் என்று அ.தி.மு.க கவுன்சிலர்களிடம் தி.மு.க உறுப்பினர்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பின் நிலவியது, இந்நிலையில் கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரனை இரண்டு நாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் இதனால் கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.









