நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையொட்டி மதுரை திமுக சார்பில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, வெற்றிகளைக் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்து இடங்களையும் அதிகமான இடத்தை திமுக வெற்றிபெற்றுள்ளதுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சியிலும் திமுக கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் திமுக அமொக வெற்றி பெற்ற நிலையில் தமிழகம் முழுவதும் வெற்றிகளைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை முன்னாள் விற்பனை குழு தலைவர் மதுரை திமுக கேகே நகர் பகுதி செயலாளர் அக்ரி கணேசன் அவர் தலைமையில் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
