தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தமிழ்நாடு தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் தீபாவளி கொண்டாட்டம் மிக மிக கோலாலமாக கொண்டாடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேஷ்டி, சேலை, இனிப்புகள், வெடி பாக்ஸ் வழங்கப்பட்டது.

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும் , நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும் , தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும் , சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன், எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா இணைந்து மதுரை மாவட்டச் செயலாளர் எம்.ராவியத் பேகம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் கூறினார்கள். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
