• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இந்து, இஸ்லாமி ஒற்றுமையில் பிரிவினை – திருத்தொண்டர் சபை ராதா கிருஷ்ணன்

ByKalamegam Viswanathan

Jan 31, 2025

இந்துக்களும், இஸ்லாமியர்களும் சுதந்திரப் போராட்ட காலம் முதல் ஒற்றுமையாகவே இருந்து வந்துள்ளனர். தற்போது ஒரு சில பிரிவினை சக்திகளால் பிளவு படுத்த பார்கின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தொண்டர் சபை ராதா கிருஷ்ணன் கூறினார்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து செய்தியாளர்களை சந்தித்தார்.
திருத்தொண்டர்கள் அறக்கட்டளை வீடு கொண்டு வெள்ளையர்களை விரட்டி அடித்ததில் இந்துக்களோடு முகமதியர்களின் பங்கும் சரி பங்கு உண்டு, யாரும் மறுக்க முடியாது. அந்த அளவுக்கு ஒற்றுமையாக வாழக்கூடிய இந்து, முஸ்லிம் சகோதரர்கள் இடையே பிரிவினை தூண்டி தனிப்பட்ட ஆதாயத்தை ஒரு சில மதவாதிகள் திடீரென புறப்பட்டு உள்ளனர். உள்ளூர் மக்களை பொறுத்தவரையில் முகமது அருளாகட்டும் ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் இருந்து வருகிறார்கள். எந்த ஒரு மதமாக இருந்தாலும் அன்பு தான் முதலில் கடைபிடிக்கப்படுகிறது. மற்றவை எல்லாம் பகுத்தறிவால் செயல்பட்டு வருகிறது.

மதவாதத்தை தூண்டி ஓநாய்கள் ரத்தம் குடிப்பது போல் செயல்பட ஒரு சில பேர் நடந்து கொள்கின்றனர். இதற்கு அடுத்தார் போல் குறிப்பிட வேண்டிய விஷயம் அடுத்தவர் பொருளை அபகரிக்க நினைக்கும் போது தான் ஏராளமான பிரச்சனைகள் நிகழ்கிறது. அவரவர் பொருளை அவரவர் பாதுகாத்தால் எந்த பிரச்சனையும் இல்லை.

இதுகுறித்து 2018 தெளிவாக உயர் நீதமன்ற தீர்ப்பை அரசிடம் முறையீடு செய்தோம். அந்த முறையிட்டில் 1923 மதுரை முதலாவது கோள லண்டன் பிரிவின்ஸ் கோர்ட் மற்றும் ஆகியவற்றில் ஆணைகளை வைத்து மாண்புமிகு சென்னை நீதிமன்றத்தில் கிடைத்த உத்தரவுபடி மூன்று மாத காலத்தில் அரசு செயல்படுத்த கிடைக்கபட்ட உத்தரவு பெறப்பட்டது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த திருப்பரங்குன்றம் பகுதி என்பது முருகனுக்கு சொந்தமானது என்ற அரசு உத்தரவிட்டது.

அரசின் ஒரு சில அலுவலர்கள் அலட்சியப் போக்கினால் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் இன்று மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் நாம் தள்ளப்பட்டு விட்டோம் . சொத்தின் மூலவர் இறைவன் அந்த இறைவனது சொத்துக்களை காப்பாற்ற அதிகாரிகள் சரியான நேரத்தில் சரியாக செயல்பட்டு இருக்க வேண்டும்.

2022 இல் உத்தரவு பெறப்பட்ட உத்தரவினை அரசு செயல்படுத்தி இருந்தால் இன்று எந்த பிரச்சினையும் எழுந்தி இருக்காது. மறைமுகமாக படைபலம் திரட்டும் சில சதி வேலைகள் நடைபெறுகிறது.

இது குறித்து மாண்புமிகு பிரதமர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சரிடம் புகார் அளித்துள்ளேன். இங்கு சமூக நல்லிணக்கம் காக்கப்பட வேண்டும். கடந்த காலங்களை செய்தது போல் அலட்சியத்தினை அதிகாரிகள் தொடர்ந்து கடைப்பிடித்ததால் சீரழிவுகள் .

லண்டன் பிரிவின்ஸ் கோர்ட்டில் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பினை செயல்படுத்துங்கள் கோவில் சொத்தை காப்பாற்றுங்கள். குற்றப் பின்னணி உடையவர்கள், தூண்டி விடுபவர்கள் அந்நிய சக்திகள் இவர்களை கண்டறிந்து களை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து விரும்பத்தகாத செயல்கள் நடைபெறும் .

இது நமக்கு விருப்பம் அல்ல மக்களிடையே மகிழ்ச்சி, முக்கியமாக மன நிறைவு முக்கியம். யாரோ ஒரு சிலர் தூண்டுதலின் பால் கலவரங்கள் ஏற்படுகிறது .

இது குறித்து மத்திய அரசிடம் நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்த பிரச்சனையை மத்திய அரசு சரியான முறையில் கையாண்டு தீர்வு காண வேண்டும். அறநிலையத்துறை உயர் நீதிமன்ற உத்தரவை ஏன் செயல்படுத்தவில்லை?

ஆட்சிப்பணி அலுவலர் மற்றும் அவருக்கு கீழ் உள்ள அலுவலர்கள் அனைவருக்கும் அரசு சம்பளம் வழங்கவில்லை அறநிலையத்துறை தான் சம்பளம் வழங்குகிறது. அவர்கள் பணிகளை செய்யாமல் அலட்சியமாக செயல்பட்டதால் இந்த அளவுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு கிடைத்த பின் அரசு துறை அதிகாரிகள் துறை செயலாளர்கள் உடனடியாக தீர்வு கண்டிருக்க வேண்டும். அறநிலையத்துறையில் கடந்த 20 ஆண்டுகளில் எந்த வித செயல்பாடுகளும் இல்லை.

2018 ல் உயர் நிதி மன்ற வழக்கு முதலில் தொடரப்பட்ட வழக்கில் 1920முதலாவது சார்பு நீதிமன்றம் லண்டன் பிரிவி கவுன்சில் 1933போன்ற வழக்குகளில் கிடைக்கப் பட்ட தீர்ப்புகள் தெளிவாக உள்ளது .

அரசு சொத்துகளை ஒரு சிலர் தவறாக கைப்பற்றினாலும் சொத்தில் மூலவர் கடவுள். பின்னால் நடைபெற்ற பட்டா மாறுதல்களினாலும்உரிமை நிலவருக்க சொந்தம் அந்த நிலவர் திருப்பரங்குன்றம் முருகன்.

ஒரு சொத்தை காப்பாற்ற வேண்டிய கடமை அரசு உள்ளது. இந்த பிரச்சினைகளை அரசு சரியான முறையில் கையாள வேண்டும் .

அதனால் தான் தற்பொழுது இந்த அளவுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. நாளை ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு முழுவதும் அதிகாரிகள் தான் பொறுப்பு.
அவர்கள் சரியாக செயல்படாததால் பிரச்சினைக்கு முக்கிய பங்கு தான்

முன்னாள் தீர்ப்புகளின் மூலம் கிடைக்கப்பெற்ற உத்தரவுகளின் படி ஆவணங்களை சரி செய்ய வேண்டும் அதற்குப்பின் தான் இரண்டு நடவடிக்கையும் எடுக்க வேண்டும். கூரை ஏறி கோழி பிடித்தது போல் கூரையும் ஏறவில்லை, கோழியையும் பிடிக்கவில்லை சரியான ஆவணங்களை முறையாக அரசு கையாண்டால் தான் முழுமையான தீர்வு கிடைக்கும்.

இப்பொழுது மக்களிடம் நிறைய மாற்றங்கள் வந்துள்ளது. முன்பு கட்சிக்கு தொண்டர்கள் வேலை செய்வதில்லை. அதற்கு பதிலாக பல்வேறு அமைப்புகள் தான் செயல்படுகின்றன. அரசு அலுவலர்கள் முறையாக செயல்படாத காரணத்தினால் தான் இந்த நிலை சிறு பான்மையரை யாரும் குறை சொல்வதில்லை. விடுதலை போராட்டத்தில் அவர்களின் பங்கு அளப்பரியது. அவர்கள் ஒற்றுமையோடு தான் இருந்தார்கள் இருக்கின்றனர். வெளியில் இருந்து வரும் அந்நிய சக்திகளினால் பணமும், தூண்டுதலாலும் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

நாம் 21 ம் நூற்றாண்டில் இருக்கிறோம். இங்கு மூடர்களை போல பலி கொடுப்பது என்று பிற்போக்கான சிந்தனையில் இருக்கிறோம்.

உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. அரசியல் கட்சிகளில் கூட தற்போது வேலை செய்ய தொண்டர்கள் இல்லை. கொடி தோரணம் போன்ற வேலைக்கு ஏஜென்ஸிகள் மூலம் நடைபெறுகிறது. அவர்கள் தான் வேலை செய்கிறார்கள். இதற்கு மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளல் குளிர் காய கூடாது. இதில் மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என திருத்தொண்டர்கள் சபை ராதா கிருஷ்ணன் கூறினார்.