தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 26 இருசக்கர வாகனங்கள் மற்றும் 14 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 40 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 11.11.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெற உள்ளது.

அதன்படி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படும் ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பொதுமக்கள் 07.11.2025 அன்று முதல் 10.11.2025 அன்று வரை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் 10.11.2025 அன்று ரூபாய் 2000/- முன்பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே 11.11.2025 அன்று ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அன்றைய தேதியில் ஏலம் எடுக்காத பட்சத்தில் முன்பணம் திரும்ப வழங்கப்படும்.
மேற்படி வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரியான நான்கு சக்கர வாகனங்களுக்கு 18% மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி மற்றும் ஏலம் எடுத்த முழுதொகையும் சேர்த்து அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதுதொடர்பான விவரங்களுக்கு 0461 2310351, 9843771441 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.













; ?>)
; ?>)
; ?>)