செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள இறகு பந்து மைதானத்தில் மாவட்ட அளவிலான 13 வயதிற்குட்பட்ட சப் ஜூனியர் இறகு பந்து போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் ஆடவர், மகளிர் தனி தனியாகவும், இரட்டையர், கலவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கடந்த மூன்று நாட்களாக இறகு பந்து போட்டிகள் நடைபெற்றது.
ஹரினா பேட்மிட்டன் அகாடமி சார்பில் நடைபெற்ற இந்த இறகு பந்து போட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட இறகு பந்து வீரர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான ரொக்க பரிசு மற்றும் நினைவு கோப்பையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், மற்றும் முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னையா செங்கல்பட்டு மாவட்ட இறகு பந்து கழக மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட சீனியர் இறகு பந்து துணைத்தலைவர் ஆர்.ரவீந்தர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.