• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

காளையார் கோவிலில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டியை.., எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தொடங்கி வைத்தார்..!

ByKalamegam Viswanathan

Nov 4, 2023
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கிராமத்தில்  கியோசி  இஷின்ரியூ கராத்தே கோபுடோ அசோசியேஷன் சங்க கூட்ட  அமைப்புகள்  (Taisho Isshinryu Karate Kobudo Association) நடத்தும் மாவட்ட அளவிலான  சிறப்பு கராத்தே பயிற்சி மற்றும் போட்டிகள்  காளையார் கோவிலில் உள்ள தனியார் மஹாலில் கராத்தே மாஸ்டர் கி.தெட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.  இந்த போட்டியினை சிவகங்கை அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். 
இந்தப் போட்டியை கராத்தே சிறப்பு  பயிற்சியாளர்  Kyoshi.Dr.M. . சண்முகவேல் அகில இந்திய கராத்தே சங்க கூட்டமைப்பு  தலைவர் மற்றும் நாகராஜன் கேரளாவைச் சேர்ந்த டெக்னிசியர் மற்றும் திருநெல்வேலி மாஸ்டர் எஸ்.மணி, தாயிசி மாஸ்டர் கணேசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர்.  
இந்தப் போட்டியில் மாவட்டத்தில் இருந்து 17க்கு மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள்.. சிவகங்கை எம்.எல்.ஏ-வும் அதிமுக மாவட்ட கழகச் செயலாளர் பி.ஆர். செந்தில்நாதன் மற்றும்  மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செல்லக்கண்ணன், தேமுதிக சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசுகளும் வழங்கினர்.