• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி..,

ByM.S.karthik

May 3, 2025

இன்றைய இளைஞர்களுக்கு ஹாக்கி விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மதுரை எல்லீஸ்நகர் பகுதியில் உள்ள கேலோ இந்தியா மைதானத்தில் லெவன் டைமண்ட்ஸ் ஹாக்கி கிளப் சார்பாக மாவட்ட அளவிலான ஒரு நாள் ஹாக்கி போட்டி(நாக் அவுட் முறை) நடைபெற்றது.

இப்போட்டியை ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியரும் ஹாக்கி வீரருமான கண்ணன் துவக்கி வைத்தார். மேலும் இதில் நாக் அவுட் முறையில் மதுரை மாவட்டத்திலிருந்து விளையாட்டுவீரர்கள் ஒன்பது குழுக்களாக கலந்து கொண்டு விளையாடினர். மேலும் 55 வயதான ஹாக்கி விளையாட்டு வீரர் கண்ணன் ஹாக்கி மீதுள்ள பற்றின் காரணமாக தனது 22 வயதான மகனையும் தன்னுடன் விளையாட வைத்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஏற்படுத்தியது. சிறப்பாக விளையாடிய விளையாட்டுவீரர்களுக்கு கோப்பைகள் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

போட்டி ஏற்பாடுகளை தலைவர் மார்க்கண்டன் செயலாளர் மீனாட்சிசுந்தரம் பொருளாளர் ஜெயசந்திரன் தலைமையில் பொன்னழகு சுல்தான்கான் சிவராமன் ஜெயசீலன் பாஷா,நோயல்ஜாக்சன் உட்பட லெவன் டைமண்ட்ஸ் ஹாக்கி கிளப் உறுப்பினர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.