• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தேனி அருகே மாவட்ட அளவிலான சிலம்பாட்டப்போட்டி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொன்னம்மாள்பட்டியில் தேனி மாவட்ட அளவிலான சிலம்பப்போட்டி துவங்கியது .

தேனி மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த போட்டியை தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக தலைவர் முனைவர் ராஜேந்திரன் தலைமைதாங்கி துவக்கிவைத்தார் . தமிழர்களின் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடாமல் காக்கவும் , இன்றைய நவீன காலகட்டத்தில் வளர்ந்துவரும் இளைய தலைமுறையினர் அதில் ஈடுபட்டு பயிற்சிபெறும் விதமாக போட்டிகள் நடத்தப்படுகின்றன . இவ்விழாவில் சிலம்பாட்டம் சுருள்வாள் சுற்றுதல் ஆகியவை தனித்திறன் போட்டிகளாக நடத்தப்படுகின்றன . பிரீ ஜூனியர் , ஜூனியர் , சீனியர் , சூப்பர் சீனியர் , என்ற பிரிவுகளில் நடத்தப்படும் போட்டிகளில் மாணவர்களும் மாணவிகளும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் . அப்போது கூடியிருந்த சக வீரர்களும் , சிலம்பாட்ட ஆர்வலர்களும் , பார்வையாளர்களும் ஆரவாரத்துடன் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள் . இன்றும் நாளையும் நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நாளை நடைபெறும் நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன .