விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டி கிராமத்தில் திராவிட மாடல் பொங்கல் திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் தாயில்பட்டி அணியினர் வெற்றி பெற்றனர். பரிசு பெற்ற அணியினருக்கு திமுக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன் ஆலோசனையின் பேரில் திமுக நிர்வாகிகள் ஜெயராமன், முத்துராஜ், ஆகியோர் வீரர்களுக்கு வழங்கி உற்சாகப் படுத்தினார்கள்.






