செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் பல்லாவரம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் எஸ். கே.ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சியின் தாம்பரம் மாநகராட்சி 50 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மமக துணை பொது செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப், மற்றும் தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டு மதுரை எழுச்சி பேரணி மற்றும் மாநாட்டின் தீர்மான விளக்கங்களை நிர்வாகிகளிடம் கூறி சிறப்பு உரையாற்றினார்.

பின்னர் தாம்பரம் யாக்கூப் பேசுகையில் மத்திய அரசு வஃக்பு வாரிய சட்டத்தை ரத்து செய்ய கோரியும், ஊராட்சி முதல் நாடாளுமன்றம் வரை இஸ்லாமியர்களுக்கு அரசியலிலும், அனைத்து துறைகளிலும் பிரதிநிதித்துவம் அளிக்க கோரியும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் தெருமுனை கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார். அந்த வகையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தின் சார்பில் ஒரே நாள் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மாநாடு குறித்து விளக்க தெருமுனை கூட்டம் நடைபெறும் என பேசினார். மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து அணி மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு நினைவு கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்..
உடன் நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.