
நாமக்கல் மாவட்டத்தில் 4 மையங்களில் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் வட்டார கல்வி அலுவலர் தேர்வுக்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, கலெக்டர் உமா தலைமை தாங்கினார் அப்போது தேர்வினை சிறப்பான முறையில் நடத்த அனைத்து துறை அலுவலர்களுக்கும் தங்களுக்கான பணிகளை சரியான முறையில் மேற்கொள்ளுமாறு தேர்வு மையங்களில் தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு அறைக்கு செல்ல வழிகாட்டி அவர்களை சரியான முறையில் அறிவிப்பு பலகைகளில் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்
தொடர்ந்து கலெக்டர் உமா பேசும் போது கூறியதாவது..,
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற பத்தாம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் வட்டார கல்வி அலுவலர் தேர்வு நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி, காவேரிப்பட்டி குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு மையங்களில் நடைபெற உள்ளது. மொத்தம் 1421 பேர் தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
தேர்வர்கள் தேர்வு நாளன்று தேர்வு மையத்திற்குள் காலை 8:30 முதல் 9.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார் காலை 9:30 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவே தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் தேர்வர்கள் ஆசிரியர்கள் தேர்வு வாரியம் தெரிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் தேர்வு மைய வளாகத்திற்குள் தேவர்கள் உடன் வருபவர்கள் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் மேற்கண்ட தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார் கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், தீயணைப்பு துறை மற்றும் அஞ்சல் துறை அதிகாரி உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் தலைமை ஆசிரியர் கலந்து கொண்டனர்.
