காரைக்கால் துறைமுக பிரைவேட் லிமிடெட்டின் சமூகப் பொறுப்புப் பிரிவான அதானி அறக்கட்டளைக்காக நியோமோஷன் நிறுவன உருவாக்கிய மோட்டார் பொருத்தப்பட்ட தலா ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 8 சக்கர நாற்காலி வாகனங்களை, லோகோமோட்டிவ் குறைபாடுகள் உள்ள எட்டு நபர்களுக்கு விநியோகம் செய்யும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோமசேகர் அப்பாராவ் பயனாளிகளுக்கு பயிற்சி மற்றும் சான்றிதழ் உள்ளிட்ட மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகளை வழங்கினார்.சமூக நலத் துறைத் தலைவர் ராஜேந்திரன்,காரைக்கால் துறைமுக சிஓஓ கேப்டன் சச்சின் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
பேட்டரி மூலம் இயக்கப்படும் மின்சார வாகனங்கள் காரைக்காலின் பசுமைச் சூழலுக்கான அர்ப்பணிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சோமசேகர் அப்பாராவ் தெரிவித்து அந்த வாகனங்களை பயனாளிகளுக்கு ஆட்சியர் ஒப்படைத்தார்.. பயிற்சி முடிந்ததும் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் பாதுகாப்பிற்கான தலைக்கவசமும் வழங்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட பயனளிகள் அந்த இருசக்க நாற்காலி வாகனங்களை இயக்கி மகிழ்ந்தனர்.