ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி நடைப்பெற்ற மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌ சங்கீதா கலந்து கொண்டார்.
தமிழ் நாடு சமூக நலத்துறை கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியமும்ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியும் சுடரி ஃபவுண்டேசன் மற்றும் பயோனியர் ஃபவுண்டேசன் இணைந்து ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லுரியில் மகளிர் தின விழா நடத்தப்பட்டது.
வேதியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் பூ சாந்தி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் சூ.வானதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் உறுப்பினர் ரேவதி அழகர்சாமி , பயோனியர் பவுண்டேஷன் மு .பால ரஞ்சனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்மா .சௌ .சங்கீதா, சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டு பேருரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது:

சங்க காலத்தில் பெண்கள் சுதந்திரமாக இருந்ததனர் அரசர்களுக்கே அறிவுரை கூறும் இடத்தில் இருந்ததனர். இடைக்காலத்தில் பெண் சுதந்திரத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டடு தற்காலத்தில் பெண்கள் சுதந்திரத்துடன் செயலாற்றுபவர்களாக உள்ளனர்.
கிராமப்புறத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பித்து தொழில் முனைவோர்களாக உருவாகி வருகிறார்கள். சமூகத்தை மாற்ற வேண்டிய கடமை பெண்களுக்கு உள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.
குடும்பத்தில் ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் பாகுபாடு இல்லாமல் சமமாக நடத்துதல் வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
மாணவிகள் அலைபேசியை அளவோடு பயன்படுத்துதல் வேண்டும் என்றும் பெற்றோரின் நம்பிக்கைக்கு உரியவர்களாக மாணவர்கள் செயல்பட வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.மகளிர் தினம் விழாவிற்காக கல்லூரியில் ரங்கோலி, மாறுவேடப் போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில், வெற்றி பெற்று முதல் மூன்று இடத்தைப் பிடித்த மாணவிகளுக்கு பீமா ஜுவல்லர்ஸ் நிறுவனம் பரிசுகளை வழங்கினார்கள். வரலாற்றுத் துறையைச் சார்ந்த ஒரு மாணவிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன .ஆங்கிலத் துறை இணை பேராசிரியர் முனைவர் ஈ.பிரேமா நன்றி உரை வழங்கினார்.டிஜிடல் சகி அமைப்பு கடைகள் நடத்தினர். இவற்றைக்கண்ட மாணவிகள் தாங்களும் தொழில்முனைவோராக விரும்புவதாகக் கூறினர்.