• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் பகுதிகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்..!

ByKalamegam Viswanathan

Jan 11, 2024

திருமங்கலம் பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் , நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகை மற்றும் பரிசுத்தொகுப்பினை வழங்கினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளில், தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகையான ரூபாய் ஆயிரம் மற்றும் பச்சரிசி, ஜீனி, கரும்பு உள்ளிட்ட பரிசு தொகுப்பினையும் நியாய விலை கடையில் வைத்து, நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
காலை முதலே நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் காத்திருந்து, அரசின் பொங்கல் பரிசுத்தொகை, பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற்றுச் சென்றனர்.