தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளில் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் வரலாறு காணாத விலை வாசி உயர்வு சொத்து வரி உயர்வு மற்றும் போதைப்பொருள் விற்பனை இதனால் போதைக்கு அடிமையாகிப்போன தமிழக இளைஞர்கள்.

இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீரழிவு, தினசரி கொலை கொள்ளை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க முடியாத நிர்வாக திறனற்ற ஸ்டாலின் அரசின் அவல நிலையை விளக்கியும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அரசை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் மானாமதுரை நகரில் பொது மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வழங்கினர் .
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நாகராஜன் நகரச் செயலாளர் விஜிபோஸ் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் AC. மாரிமுத்து ,அழகர்பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.