• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை பேருந்து நிலையத்தில் மனித உரிமை தினத்தை முன்னிட்டு கபசுர குடிநீர் வினியோகம்..,

ByG.Suresh

Dec 10, 2023

சிவகங்கை பேருந்து நிலையத்தில் தேசிய உரிமைகள் காலம் நுகர்வோர் அமைப்பின் சார்பில் மனித உரிமை தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, டெங்கு விழிப்புணர்வு செய்யப்பட்டு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி தலைமையில் தேசிய உரிமை கழகத்தின் நிறுவன டாக்டர் பி கே பொதுச் செயலாளர் பிரபாகர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு கபசுர குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மேலும் தலைமை நிலைய செயலாளர் திரு ஜி எல் கோவிந்தராஜ் ,மாநில துணைத்தலைவர் திரு ஆர் முஹம்மது பில்லால் மாநில அமைப்பு செயலாளர் ஜி வேல்முருகன் ,மாநில இளைஞர் அணி தலைவர் திரு வி கார்த்திகேயன் ,மாநில மகளிர் தலைவி திருமதி ஆறுமுக தேவி,சிவகங்கை மாவட்ட தலைவர் எஸ் யோகநாதன் , மாவட்ட செயலாளர் திரு கோவிந்தன் , ராமநாதபுரம் மாவட்ட தலைவி வி. பானுமதி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாநில இளைஞரணி துணைத் தலைவர் வி. சதீஷ்குமார் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் எம். திருப்பதி மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர் ஆச விக்கி மற்றும் தேசிய உரிமை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.