அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகையை முன்னிட்டு உசிலம்பட்டியில் தேர்தல் விதி முறைகளை மீறி திமுக வினர் உயரமான கொடி கம்பங்களை ஊன்றி போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் வேதனை தெவிக்கின்றனர்.
நாடுமுழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் முதல் கட்டமாக 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 ந்தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ள சூழலில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ள சூழலில், இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனி நாடாளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து தேர்தல் இன்று மாலை பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இந்நிலையில் உசிலம்பட்டி நகர் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும்
உயரமான கொடிக்கம்பங்கள், விளம்பர பதாகைகள், மின் கம்பங்களை ஊன்றி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தி சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் ஆளும் திமுக வினர் தேர்தல் விதி முறைகளை மீறி விதிகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.