• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

காலவரையின்றி மூடப்படும் டிஸ்னி பூங்கா…

Byகாயத்ரி

Mar 22, 2022

அமெரிக்காவை சேர்ந்த டிஸ்னி நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்காக்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. அந்த வகையில் சீனாவில் அதிக மக்கள் தொகையை கொண்ட பெரிய நகரமான ஷாங்காய் நகரில் பிரமாண்டமான டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா உள்ளது.

இந்நிலையில், சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து அங்கு பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இதனிடையே ஷாங்காய் நகரிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. எனினும், அங்கு இதுவரை ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. அதே சமயம் முடிந்தவரை மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஷாங்காய் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவை காலவரையின்றி மூடுவதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.