ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 ஆம் தேதி உலக காற்று தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மதுரை மாநகர் முழுவதும் பலத்த காற்று காலை முதல் வீசி வருகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் கீழே விழுந்தும் மின் இழப்புகள் ஒன்றோடு ஒன்று உரசி மின் இணைப்புகள் செயல் இழந்தும் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு பகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் உயர் மின் அழுத்தமானது பசுமலையில் இருந்து அரசர் அடி மின்விநியோகம் செய்யும் உயர் மின் அழுத்தம் கம்பிகள் செல்கிறது. காட்டின் வேகம் தாங்க முடியாமல் ஒரு வீட்டின் மீது இந்த மின் வயர் உரசியது. இதில் இரண்டு வீடுகளில் பயங்கர வெடி சத்தம் போல் வெடித்து வீட்டில் உள்ள கான்கிரீட் சுவர் பெயர்ந்து விழுந்தது.

வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வெளியே சென்று இருந்ததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து மதுரை பழங்காநத்தம் மின்வாரிய அதிகாரி பாலுசாமி அவர்களுக்கு தகவல் கொடுத்த சில நிமிடங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சுந்தர்ராஜன் என்கின்ற மின்வாரிய ஊழியர் மின் இணைப்பை துண்டித்து பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்பொழுது பணியை செய்து விட்டு கீழே இறங்கி அடுத்த வினாடி மீண்டும் அந்த மின்மாற்றில் மின்சாரம் ரிட்டன் ஆகியுள்ளது. இதைக் கண்டு அதிர்ந்த சுந்தர்ராஜன் என்ன ஏது என்று புரியாமல் தவித்திருந்தார். அப்பொழுதுதான் பழங்காநத்தம் ஏஇ பாலுசாமி பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெருவில் ஏதோ வெடித்தது போல் சத்தம் வந்தது என தகவல் வந்தது என சொல்லவும் ஆம் சார் நானும் இங்கே ரிட்டர்ன் சப்ளை ஆகி உள்ளது என்ன என்று தெரியவில்லை எனவும் சொன்னார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு அனைத்து மின்வாரிய ஊழியர்களும் வந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். நல்வாய்ப்பாக மின்வாரிய ஊழியர் சில வினாடிகளில் உயிர் தப்பினார். எனினும் இன்று உலக காற்று தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில் மதுரையில் பல்வேறு பகுதிகளில் காற்று பலமாக வீசியதால் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
விடுமுறை நாட்கள் என்றும் பாராமல் மின்வாரிய ஊழியர்கள் ஒரு பகுதியாக சென்று பழுது ஏற்பட்டுள்ள மின் பகுதியை சரி செய்யும் பணியினை தற்போது வரை மேற்கொண்டு வருகின்றனர். மின்வாரிய ஊழியர்களில் செயல்பாட்டைக் கண்டு அனைத்து பகுதி மக்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.