தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் அமைப்பு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி, கூண்டோடு கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்திற்குட்பட்ட மகளிர் காங்கிரஸ் கலைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர் காங்கிரசின் மாநில, மாவட்ட, வட்டார, வட்ட, பஞ்சாயத்து பூத் கமிட்டிகள் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டு இருக்கிறது.
தேசிய அளவில் மகளிர் காங்கிரசின் தலைவி அல்கா லம்பா உத்தரவின்பேரில், தமிழ்நாடு மாநில மகளிர் காங்கிரஸ் கலைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய கமிட்டி அமைத்து உத்தரவிடப்படும் எனவும் அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது. இதன் பின்னணி காரணங்கள் குறித்து விசாரிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைமை எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி மாநில அளவிலான மகளிர் காங்கிரஸ் அமைப்பை கலைத்து உத்தரவிட்டுள்ளது, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
