• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் பேரிடர் கால தற்காப்பு விழிப்புணர்வு…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை, வருவாய்துறை மற்றும் எடப்பாடி தீயணைப்புத்துறை வீரர்கள் எடப்பாடி வட்டாட்சியர் விமல்பிரகாசம் தலைமையில் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் செயல் விளக்கம் செய்து காட்டினர்.

இதில் பேரிடர் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரில் சிக்கி தவிப்பவர்களை, பொதுமக்களே தங்களது வீட்டில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் டியூப் மற்றும் வாட்டர் கேன் போன்ற உபகரணங்களை வைத்து தங்களை தற்காத்துக் கொள்வது குறித்து பொதுமக்கள் முன்னிலையில் தீயணைப்புத்துறை வீரர்கள் செய்து காட்டினார்.

பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் வனஜா,கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி, மற்றும் பூலாம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் பொதுமக்கள் பலரும் உடனிருந்தனர்.