• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தாதா87 படத்தை நினைவூட்டும் இந்தி படமான சண்டிகர் கரே ஆஷிக்கி குழுவினருக்கு இயக்குநர் விஜயஸ்ரீ பாராட்டு

சமீபத்தில் வெளியான இந்தி திரைப்படமான சண்டிகர் கரே ஆஷிக்கியின் மையக்கருவும் காட்சிகளும் தனது 2019-ம் ஆண்டு படைப்பான தாதா87-ஐ நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளன என்று இரண்டு படங்களையும் பார்த்த நண்பர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும், இது குறித்து தான் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் இயக்குநர் விஜயஸ்ரீ கூறியுள்ளார்.

சாருஹாசன் நடிப்பில் வெளியான தாதா87-க்கு பிறகு பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் நாயகனாக நடிக்கும் பவுடர் திரைப்படத்தை இயக்கிவுள்ளவரும், வெள்ளி விழா நாயகன் மோகன் நீண்ட காலத்திற்கு பிறகு முதன்மை வேடத்தில் நடிக்கவுள்ள ஹரா படத்தின் இயக்குநருமான விஜயஸ்ரீ கூறுகையில், “இந்திய சினிமாவில் முதன்முறையாக பெண் திருநங்கையாக நடித்த படம் என்ற பெருமையும் உலக சினிமா வரலாற்றிலேயே புகை, மதுவுக்கு எதிரான டைட்டிலில் கார்டுடன் பெண்களை அவர்கள் அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றம் என்ற வாசகம் இடம்பெற்ற படம் என்ற பெருமையும் தாதா87-ஐயே சேரும்.

காமத்தை விட அன்பின் வெளிப்பாடு தான் காதல் என்ற கருத்தை உலகத்திற்கு பதிவு செய்த படம் தான் தாதா87. சமீபத்தில் வெளியான இந்தி திரைப்படமான சண்டிகர் கரே ஆஷிக்கியின் மையக்கருவும் காட்சிகளும் தாதா87-ஐ வலுவாக நினைவூட்டுவதாக இரு படங்களையும் பார்த்த நண்பர்கள் எனக்கு தெரிவித்தனர் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்றைய காலகட்டத்தில் சமுதாயத்திற்கு மிகவும் தேவையான கதைக்களத்தையும், கருத்துகளையும், காட்சிகளையும் தேர்ந்தெடுத்ததற்காக சண்டிகர் கரே ஆஷிக்கி படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என புன்னகையுடன் கூறினார்.