• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாநாடு’ திரைப்படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குனர் ஷங்கர்..!

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘மாநாடு’. டைம் லூப் அடிப்படையில் கதை கொண்ட இப்படத்திற்கு ரசிகர்கள், விமர்சகர்கள், திரையுலகினர் என அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். படம் வணிகரீதியாக சிலம்பரசன் இதுவரை நடித்து வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக வெற்றிபெற்றிருக்கிறது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில் “வெங்கட் பிரபு புத்திசாலித்தனமாக ‘மாநாடு’ படத்தை எழுதி, இயக்கியுள்ளார். சிலம்பரசன் அசத்தியுள்ளார்.

எஸ்ஜே சூர்யா மார்வலஸ். யுவனின் இசை படத்தை உயர்த்துகிறது. அனைத்து நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் அவர்களது சிறந்ததைக் காட்டியுள்ளார்கள். தமிழ் சினிமாவிற்குப் புதிய அனுபவமாகவும், சிறப்பான பொழுதுபோக்காகவும் உள்ளது,” எனப் பதிவிட்டுளளார்.