• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சாலையோரம் இறந்து கிடந்த இயக்குநர் – திரையுலகினர் அதிர்ச்சி

Byமதி

Dec 8, 2021

மாநகர காவல், வெற்றி மேல் வெற்றி போன்ற படங்களை இயக்கிய தியாகராஜன் சாலையோரம் இறந்து கிடந்த விஷயம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, ஏவி.எம்.ன் தயாரிப்பில் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற மாநகர காவல் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் M.தியாகராஜன்.

இந்நிலையில் ஏவிஎம் ஸ்டூடியோ அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்று காலை இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த விருகம்பாக்கம் போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்த நபர் M.தியாகராஜன் என்பது தெரிய வந்திருக்கிறது. வெற்றி படங்களின் மூலம் பிரபல இயக்குநராக திகழ்ந்த தியாகராஜன் சாலையோரம் இறந்து கிடந்த விஷயம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.