• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நேரடி விமான சேவை தொடங்க வேண்டும்-முதல்வர் வலியுறுத்தல்

Byகாயத்ரி

Nov 25, 2021

மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தமிழகத்துக்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலேசியா, சிங்கப்பூரில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் துபாய், தோகா, கொழும்பு வழியாக தமிழகம் வருகின்றனர். மாற்றுப்பாதையில் பயணம் செய்ய வேண்டியுள்ளதால் புலம்பெயர் தமிழர்கள் அதிக கட்டணம் செலுத்துகின்றனர் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.ஒன்றிய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கோவிட் கால விமானப் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிலையை குறிப்பிட்டு அந்நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விரும்பும் நிலையில், நேரடி விமான சேவையில்லாத காரணத்தால், துபாய், தோகா மற்றும் கொழும்பு மார்க்கமாக மாற்றுப்பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

பல்வேறு இன்னல்களுடன் அதிக விமானக் கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டி தற்காலிக விமான சேவைகளை வழங்கிட ஏதுவாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.