• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது..,

ByS.Ariyanayagam

Apr 3, 2026

திண்டுக்கல் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார்.
திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கும்போது சார்பு ஆய்வாளர் கலையரசன் கையும் களவுமாக பிடிபட்டார்.

திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கலையரசன் பழனி பைபாஸ் சாலையில் 10 ஆயிரம் பணம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ய முயன்ற போது சார்பு ஆய்வாளர் கலையரசன் கண்ணாடியால் தனக்குத்தானே குத்திய போது லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் தடுத்தார். அப்போது டிஎஸ்பி நாகராஜனுக்கு காயம் ஏற்பட்டது. பார் நடத்துவதற்கு மாதம் மாதம் 10 ஆயிரம் கொடுக்க வலியுறுத்தி சுகுமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.