
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் நீர் நிலைகளில் காலாவதியான மாத்திரைகள், மருந்துபாட்டிகள் என கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளால் ஆபத்து ஏற்படும் என்று அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ளது செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி பத்மாநகர். இந்த ஊரில் அனுமதியின்றி வெட்டப்பட்ட பாறை பள்ளங்களில் நீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீரைத்தான் இந்த பகுதி மக்கள் குளிக்க, துவைக்க பயன்படுத்தி வருகிறார்கள். ஆடுமாடுகளும் தண்ணீர் அருந்தும் பகுதியாக இப்பகுதி உள்ளது.

தற்போது இந்த பகுதி மருத்துவக்கழிவுகள் கொட்டப்படும் குப்பைத்தொட்டியாக மாறி உள்ளது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகமும், வருவாய்த்துறை நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலை உள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள நீர்நிலையில் காலவதியான மாத்திரைகள், மருந்துபாட்டில்கள், என மருத்துவக்கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படுவது வாடிக்கையாகி உள்ளது.
அருகில் குடியிருப்புகள் உள்ளன. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மருத்துவக்கழிவுகளை கொட்டிச்செல்வது இப்பகுதி மக்களை ஆட்சி நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழக்கச் செய்கிறது. இதே போல் அருகில் உள்ள செங்குளத்தில் கடந்த முறை கொரானா மருத்துவக்கழிவுகளை கொட்டிய போது நமது தொலைக்காட்சி மூலமாக செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பேட்டி. 1. சுப்ரமணி, முன்னாள் ஊராட்சி உறுப்பினர். செட்டிநாயக்கன்பட்டி.